Friday, June 18, 2010

மணிரத்னம் " ராவணன் "- கண்களுக்கு இதம்,மனதிற்கு ?

கதைகளம் -
ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை -
ராமாயணம் என்ற இதிகாசத்தை இடம்பெயர்த்து ஒரு சில துளி பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்ற நிகழ்வுகளை மணி ரத்னம் தனக்கே உரிய பாணியில் மேம்போக்காய் தூவிவிட்டு இயற்கை எழில் மிகு மேற்கு மலைத்தொடர் பகுதிகளில் படமாக்கி உள்ளார் - படைப்பென்று சொல்வதற்கில்லை .

விக்ரம்-
விக்ரம் "வீரா" என்ற மலைசாதி இளைஞனாய் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வேன் என்று நீங்கள் ஏதிர்பார்த்தால் - சற்று என்ன, மிகவுமே ஏமாந்துதான் போவீர்கள். விக்ரம் உடலால் மட்டும் உழைத்திருக்கிறார். அவருடைய கோபம், கனிவு, காதல் -என்ற அத்தனை உணர்வு வெளிப்பாட்டிர்க்கும் திரைக்கதையில் தகுந்த அடித்தளம் இல்லை- தங்கை , தம்பி இழந்த ஒருவர் அந்த சில நாட்களிலே அடுத்தவன் மனைவியை கண்டு காதலில் உருகுவது கண்களை உறுத்துகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகிய முதிரிளம் பெண்ணுடன் தன்னந்தனியாக அத்துவான காட்டில் சுற்றி திரிந்தால் கிழவனுக்கும் காதலோ காமமோ வந்து தானே ஆக வேண்டும் .

ஐஸ்வர்யா ராய் பச்சன் - மிக அழகாய் இருக்கிறார். மிக அழகாவும் நடிக்கிறார். அந்த இரு அழகிய கண்களில் ஆரம்பத்தில் கோபம், இயலாமை -பிறகு ஒரு புரிதல், மெல்லிய பாசம் - என்று ஒரு metamorphosis ஆகி மனதை குழைய வைக்கிறார்.

ப்ரித்விராஜ்- மிகை படாமல் மிடுக்குடன், குடுத்த காசிற்கு அளவாக நடித்து நிறைவை தருகிறார்.

பிரபு- பழங்குடி கும்பகர்ணன்-அவ்வப்போது ஐஸ்வர்யா ராய் க்கு பழைய சோறு, நெல்லிக்காய், கூழ் என்று உணவு படைத்துவிட்டு ஓரமாய் நின்று சிலிர்க்கிறார்.
இளைய திலகம் நிலைமை ஓரளவு தேவலை-நவரச நாயகன் கார்த்திக் அனுமான் கதாபாத்திரம் என்பதற்காக மரத்தில் தவ்வி மலை ஏறி திரிகிறார்-வால் ஒன்று தான் குறைச்சல் .மணி ரத்னம் படம் ஒன்றில் தலை காட்ட தன்மானம் இழக்க வேண்டுமோ
???

பிரியாமணி சில நிமிடம் சூற்பனகையாய் வநது போகிறார். ரஞ்சிதா திரையில் சில துளிகள் வரும்போது மட்டும் ரசிகர்கள் கை தட்டி தம் வக்கிரங்களை வெளிப்படுத்துகிறார்கள்.


மணி சார் படம் என்பதால் technically brilliant என்றும் வழக்கம்போல் முழு மனதுடன் சொல்லமுடியவில்லை.

சந்தோஷ் சிவன், மணிகண்டன் -ஒருவர் மட்டும் போதும், இருவரும் என்றால்-திகட்ட திகட்ட அள்ளித்தருகிறார்கள்-இதற்க்கு மேல் அவர்கள் உழைக்க முடியாது - milestone/ benchmark/ gold standard in outdoor filming.

சாபு cyril- இப்படி ஒரு களத்தில் இப்படியும் கலை அமைப்புகளை நிறுவ முடிமா- சில சமயம் மெய் சிலிர்கிறது- சில சமயம் - it just blends in - really authentic

ஆனால் சுஹாசினி மணி ரத்னம் அவர்களின் கதை வசனம் மண் வாசனையும் மணக்கவில்லை-மேலும் ஒரு படி மேலே போய் pseudo-intellectual நெடி படம் நெடுக மனதை திரைபடத்தொடு ஒட்டவிடாமல் செய்கிறது.அவர் படைத்த " இந்திரா " என்றொரு " மாபெரும் " திரைபடத்தை அவர் வசனங்கள் நினைவூட்டுகின்றன -
மலை கிராமத்து மாட்டிறைச்சி கடையில் மயிலாப்பூர் தமிழ் மணம் கமழ்கிறது.

AR ரெஹ்மான் - பாடல்கள் பொதுவாக முதலில் மனதில் ஒட்டாது-கேட்க கேட்க பிடித்து போகும் .அதுவும் மணி ரத்னம் திரைப்படம் என்றால் அந்த visual treatment பாடல்களை அழியா பதிவாய் அமைந்துவிடும்.
to cut to the chase,songs are much cliched benumbing processions interspersed by some contrived happenings.

மணி ரத்னத்திடம் -multilayered perspectives ஏதிர்பார்த்து போனால் unidimensional charecterisation தான் கிடைக்கிறது. metaphoric approach இருக்கும் என்று நினைத்தால் literal and concrete expression களைத்தான் பார்க்க முடிகிறது. கன்னத்தில் முத்தமிட்டால் பிறகு மணி ரத்னம் தமிழ் ரசிகர்களை மறந்து ஒரு pan-indian presence க்கு ஆசைப்பட்டு ரெண்டும்கெட்டான் குழப்பமான படைப்புகளையே தந்து வருகிறார் . அனைத்து வகை ரசிகர்களையும் திருப்தி படுத்த முயற்சி செய்து அனைவரையும் ஏமாற்றவே செய்துள்ளார்.

ராவணன் - ஒரு தடவை பார்க்கலாம்- அழகிய ஒளிப்பதிவிற்கும் அழகே நிறைந்த ஐஸ்வர்யா ராய்-இற்கும் ....

பின் குறிப்பு- திரை அரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு ரசிகர் அடித்த கமெண்ட் -
" உசிரே போகுதே , உசிரே போகுதே - படத்தை நானும் பார்க்கயில ..."

5 comments:

Anonymous said...

Art director is Sameer chanda ...not Sabhu cyril

Dr.karthikeyan a.k.a.GG said...

i stand corrected, my apologies

Unknown said...

எதிர் கருத்து கூற வருகிறேன்
எதிரி அல்ல நான் நண்பன் தான்

எதிரிக்கு வந்தாலும் காதல் காதல் தான்
மாற்றான் தோட்டத்து மல்லிகையை
பறிக்காமல் கசக்காமல் செடியோடு
நகர்த்தி ரசித்த ராவணனின் காதல் கதையை
காம நெடி இல்லாமல் காதலாய் சொன்னதால்
மணி "ரத்தினம்" தான்

வால்மீகி சொல்ல மறந்ததை
கம்பன் முழுதும் சொல்லாததை
தைரியமாய் சொல்ல வந்ததால்
இதுவும் ஒரு படைப்பு தான்

கண்கள் குளிர்ந்தன மனமும் மகிழ்ந்தது

Dr.karthikeyan a.k.a.GG said...

பார்த்தி,
அழகாய் சொல்லிவிட்டாய் ,
மிக அழகாய் -
உன் நேர்த்தி
மணி ரத்னம் இடம் இருந்திருந்தால்
ராவணன் இன்னும் அழகாய் இருந்திருக்கும்;

கருத்தில் குறை இல்லை-
"ராவணன் தான் ராமாயண காவியத்தின்
ஈடு இணையற்ற கதாநாயகன்
கண்ணியமான காதலை காவியமாய் சொன்னவன்"

ஆனால்- நல்ல கருத்து என்றாலும் கொஞ்சம் கருத்தாய் சொல்லி இருக்கலாம்

கங்கை நீர்தான் என்றாலும்
மண் கலயம் மறுத்து
பிளாஸ்டிக் பையில் அடைத்து தந்ததால் கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது

மற்றபடி மாற்று கருத்திற்கு என்றும் இடம் உண்டு;
என் கருத்தை மறுத்து வினவும் உரிமையும் உயர் தினவும் உனக்கு என்றும் உண்டு...

அன்புடன், gg

Anonymous said...

Hi GG,

This is Senthil's sister Uma. Great Review. Very precisely stated.